கடக்க முடியா சோகத்தில் கடவுளின் தேசம்... - கைகொடுத்த மீனவ ராணுவம்!

ழிப்பேரலை தாக்குதல் அரை மணி நேரத்தில் நடந்துமுடிந்தது... ஒகி புயலின் தாக்குதல் அரை நாள் நீடித்தது... ஆனால் கேரளாவில், ஒன்பது நாள்களாக ஓயாமல் அடித்தது கன மழை. அதனால், நொறுங்கிக்கிடக்கிறது அந்த மாநிலம். ‘கன மழை’, ‘பேய் மழை’ என இதற்கு என்னென்னவோப் பெயர்களைச் சூட்டுகிறார்கள்... ஆனால், இதைப் ‘பிரளயம்’ என்கிறார்கள் கேரள மக்கள். சொல்லி அழக்கூட ஒருவரும் மிஞ்சாமல் ஒட்டுமொத்தக் குடும்பமும் மாண்டுபோன கதை உட்பட, துயரத்தால் ததும்பும் பல்லாயிரக்கணக்கான சோகக்கதைகளைத் தாங்க முடியாமல் தாங்கிநிற்கிறது கடவுளின் தேசம்.

மீனவ ராணுவம்!

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பெய்த கன மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது. காணாமல்போனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்களும் களமிறங்கியிருந்தாலும், நான்காம் ராணுவமாகச் இயங்கிவருகிறார்கள் மீனவ மக்கள். ‘இவர்கள்தான் எங்கள் மாநிலத்தின் ராணுவவீரர்கள்’ என்று மீனவர்களுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன்.

வெள்ளத்தின் அளவு உயர்ந்துவருவது தெரிந்ததும் திருவனந்தபுரம், கொல்லம், கண்ணணூர், திருச்சூர், மலப்புறம், எர்ணாகுளம்  உட்படப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் மீனவர்கள் தங்கள் படகுகளை டெம்போக்களில் ஏற்றிக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு விரைந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த ஜாய் பெர்ணாண்டஸ் மற்றும் அவரின் மகன் சஜய் ஆகியோரிடம் பேசினோம். “கடலில் படகு ஓட்டுவதுபோன்றது அல்ல இது. வேகமாகப் பாய்ந்துகொண்டிருக்கும் தண்ணீரில் படகைச் செலுத்தி எங்களுக்குப் பழக்கமில்லை. வெள்ளம் இழுப்பு அதிகமுள்ள பகுதிகளில் மரங்களிலும், தூண்களிலும் படகுகளைக் கயிற்றால் கட்டிவிட்டு, மீட்புப்பணியில் ஈடுபடுகிறோம். உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் எங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். பெரிய சுவர்களில் மோதியதால் பல படகுகளுக்குச் சேதம் ஏற்பட்டது. மீட்புப்பணிக்குச் சென்ற மீனவர்களில் சிலருக்கு எலும்புமுறிவு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick