ஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்... ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய்... | Herbal Fuel fame Ramar Pillai interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்... ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய்...

அசராமல் அதிரடி கிளப்பும் ராமர் பிள்ளை!

‘‘விரைவில் எங்கள் மூலிகை எரிபொருள் விற்பனையைத் தொடங்க பிரதமர் மோடி வருவார்’’ என்கிறார் ராமர் பிள்ளை. மூலிகை பெட்ரோல் ராமர், திரும்பவும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறார். 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே ஆச்சர்யப்பட வைத்த செய்தி ஒன்றுக்கு, இப்போது மீண்டும் உயிர் வந்துள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, பள்ளிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காத ராமர் பிள்ளை, மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக 1996-ம் ஆண்டு அறிவித்தபோது, விஞ்ஞானிகள் வட்டாரம் ஆச்சர்யமடைந்தது.

ஆனால், அவர் தயாரித்த எரிபொருளை லிட்டர் பத்து ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கும் விற்றார். (அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 ரூபாய்.) மலிவான இந்த எரிபொருளின் விற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில், பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாத ராமர் பிள்ளையின் தயாரிப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள், ‘இது பெட்ரோலே அல்ல, இது ஒரு மோசடி’ என்றனர். டேராடூனில் உள்ள பெட்ரோலியத்துக்கான இந்திய ஆய்வு மையமும் ‘இது பெட்ரோல் அல்ல’ என்று கூறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick