“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்!”

‘அளவுக்கு அதிகமாக ஆற்றில் மணல் திருடப்பட்டதுதான் காரணம்’... ‘பழைமையான மதகுகளின் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த இரும்பு உத்திரங்களைக் கழற்றி விற்றதுதான் காரணம்’... இப்படி திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணை உடைந்ததற்குச் சொல்லப்படும் காரணங்கள் பகீர் கிளப்புகின்றன.

கல்லணையைப் போலவே எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாங்கக்கூடியது முக்கொம்பு மேலணை. கல்லணையின் கட்டுமானத்தைப் பார்த்து வியந்த ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர்,  1836-ம் ஆண்டு கட்டிய அணை இது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த அணைக்கட்டின் மேலே ஒரு சாலை உண்டு. கரூர் – முக்கொம்பு சாலையிலிருந்து அக்கரையில் உள்ள முசிறி - திருச்சி சாலைக்குச் செல்லும் கார்கள் மற்றும் வேன்கள் அந்தச் சாலை வழியே சென்றுவந்தன. அந்த அளவுக்கு இந்த அணை வலுவாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick