ஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி! - தடைபோடும் தீபா

ஜெயலலிதா நடித்த படங்களைவிட, பரபரப்பாகிவிட்டது அவரைப் பற்றிய படம். ஒரே நேரத்தில் அவரது சுயசரிதையை மூன்று பேர் திரைப்படமாக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி, பரபரக்கிறது கோலிவுட்.

எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா. இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கப் போகிறார். ஜெ. வேடத்தில் ஐஸ்வர்யா ராய் அல்லது அனுஷ்கா நடிப்பார்கள். எம்.ஜி.ஆராக மோகன்லால் நடிக்கிறார் என்று அந்தப் படத்தைத்  தயாரிக்கவிருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

இது பற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘‘ஜெ. உயிருடன் இருந்தபோது, அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் தொழிலதிபர் ஆதித்யா பரத்வாஜ். ஜெயலலிதாவை அடிக்கடி போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்துப் பேசும் அளவுக்குப் பழக்கமானவர். ஒருமுறை, ‘உங்கள் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க விரும்புகிறேன்’ என்று ஜெ.விடம் அவர் சொல்லிருக்கிறார். முதலில் மறுத்த ஜெயலலிதா, பிறகு சம்மதம் தெரிவித்துள்ளார். உற்சாகமடைந்த ஆதித்யா பரத்வாஜ், படத்துக்கு யாரை இயக்குநராகப் போடுவது என்று ஜெ.விடமே கேட்க, பாரதிராஜாவின் பெயரை டிக் செய்துள்ளார் ஜெயலலிதா. எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைந்துவிட, திரைப்படத் தயாரிப்புத் திட்டம் நின்றுபோனது. இப்போது, அதற்கான பணிகள் பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளார் ஆதித்யா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick