சென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்!

கைவிடப்பட்ட கடவுளின் தேச மக்கள்

வெள்ளத்தால் சிதைந்த கேரளாவுக்காக, தேசமே கண்ணீர் சிந்துகிறது. மண்சரிவில் நொறுங்கிய வீடுகள், வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான மக்கள், வேருடன் சாய்ந்த மரங்கள், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட உடைமைகள், புதைந்துபோன சாலைகள், மின்சாரமில்லாமல் அச்சமூட்டும் இருள், உறவுகளை இழந்து கதறும் மக்கள் என்று கடவுளின் தேசத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சோக வடுக்கள்தான்.

வெள்ளப் பாதிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள ஜூனியர் விகடன் டீம் கேரளாவில் களமிறங்கியது.

வயநாடு மாவட்டத்தில் 230-க்கும் மேற்பட்ட முகாம்களில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருக்கின்றனர். நிவாரணப் பொருள்கள் தினந்தோறும் குவிந்தாலும், முகாம்களில் அடைக்கலமாகும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் அதிகரித்துவருகிறது. கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் பெய்ததுபோலவே, வயநாட்டிலும் அதிக மழை பெய்தது. ஆனால், இங்கு ஏற்பட்டுள்ள சேதாரங்களுக்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

‘‘ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய மண் அணை (Earth Dam) என்று அழைக்கப்படும் பாணாஸூரா சாகர் அணை, எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் திறக்கப்பட்டதுதான் உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும் முக்கியக் காரணம்’’ என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தாழ்வான மற்றும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. நிலச்சரிவும் அதிகம் ஏற்பட்டுள்ளதால், வயநாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையை ஆக்கிரமிப்பு செய்ததும் வயநாட்டின் பாதிப்புக்கு மற்றொரு முக்கியக் காரணம் என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்