திருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்!

திருச்சி மாவட்டம் முருங்கப்பட்டியில் 19 உயிர்களைப் பலிவாங்கிய தனியார் வெடிமருந்து ஆலை விபத்து  தமிழகத்தையே உலுக்கியது. அந்த வெடிவிபத்து நிகழ்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளாகும் நிலையில், ‘வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற அந்த நிறுவனத்தினர், தங்கள் வெடிமருந்து ஆலையின் புதிய குடோனை திருப்பூர் மாவட்டத்தில் கட்டமைத்து  வருகிறார்கள். இது, அந்தப் பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த சின்ன மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்கல்பட்டி என்ற பகுதியில்தான், இந்த வெடிமருந்து குடோன் கட்டப்பட்டுள்ளது. பிச்சைக்கல்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், ‘‘2015-ம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் என்னைச் சந்தித்தார். ‘எனக்கு தமிழ்நாட்டில் நிறைய பிசினஸ் உள்ளது. சமீபகாலமாக விவசாயத்தின் மீது அதிக ஆர்வமாக இருக்கிறேன். உங்கள் நிலத்தை எனக்கு விற்றால் விவசாயம் செய்வேன்’ என்று சொன்னார். நானும் என்னுடைய 22 ஏக்கர் நிலத்தை அவருக்கு விற்பனை செய்தேன். நிலத்தை வாங்கிய அவர், ஒரு வருடம் வரை அதில் எந்த விவசாய வேலையும் செய்யவில்லை. பிறகு, திடீரென அந்த நிலத்தில் கட்டட வேலைகளைத் தொடங்கினார்கள். எங்களுக்குத் தெரிந்த அரசு அதிகாரிகளிடம்  அதுபற்றி விசாரித்தோம். அப்போதுதான், அங்கு, வெடிமருந்து குடோன் கட்டுகிறார்கள் என்ற உண்மை தெரியவந்தது’’ என்றார் அப்பாவியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick