அரசுக்கல்லூரியை தனது தொகுதிக்காக அபகரிக்கிறாரா அமைச்சர்?

கரூர் பஞ்சாயத்து

‘‘கரூர்ல நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கரூர்லேயே மிகவும் பின்தங்கிய பகுதியான கடவூர் பகுதியில வரும் கல்வி ஆண்டிலேயே அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்’னு அறிவிச்சார். ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாக’, போக்குவரத்துத்துறை அமைச்சர்    எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதை தனது கரூர் தொகுதிக்குக் கொண்டுபோகப் பார்க்கிறார்’’ என்று எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறார்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

கரூர் மாவட்டம் தமிழகத்தின் மையப் பகுதியில் இருக்கிறது. கரூரைச் சுற்றி டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை தயாரிப்பு, பஸ் பாடி கட்டுதல், பாய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்றுவந்தாலும், மாவட்டத்தின் பல கிராமங்கள் ‘சிட்டிசன்’ படத்தில் வரும் அத்திப்பட்டி போல் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருக்கின்றன. கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண்-7 கரூர் வழியாகச் செல்கிறது. ஆனால், மாவட்டத்தில் பல கிராமங்களிலிருந்து கரூருக்குச் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை. அதிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடவூர் ஒன்றியத்தில் அனைத்துக் கிராமங்களும் சாலை, போக்குவரத்து, கல்வி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கின்றன. இங்கு அரசு கலைக்கல்லூரிகளும் இல்லை; தனியார் கல்லூரிகளும் இல்லை. உயர்கல்வி பயில இங்குள்ள மாணவர்கள் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரூருக்குச் செல்ல வேண்டிய நிலைமை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick