மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை நெருங்கும் தாமரை!

‘‘தேசிய அளவில் காங்கிரஸ் அமைத்துள்ள மதச்சார் பற்ற கூட்டணியில் தி.மு.க முக்கியமான அங்கமாக இருக்கிறது. அந்த தி.மு.க-வை தங்கள் கூட்டணிக் கட்சியாக மாற்றிவிட முடியும் என நம்பிக்கையாகக் களமிறங்கியுள்ளது பி.ஜே.பி’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.

‘‘என்ன புதிர் போடுகிறீர்... இதெல்லாம் நடக்குமா?’’ என்றோம்.

‘‘ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவுள்ள கருணாநிதி புகழஞ்சலிக் கூட்டம், இதற்கான அச்சாரமாக இருக்கும் என்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் அமித் ஷா. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வரவில்லை; குலாம் நபி ஆசாத் பங்கேற்கிறார். அமித் ஷா நினைத்திருந்தால், இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரையாவது அனுப்பி யிருக்கலாம். ஆனால், அவரே பங்கேற்க வருகிறார். ‘ஆயிரக்கணக்கில் திரண்டி ருக்கும் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பேசக் கிடைக்கும் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வேன்’ என டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் சிலரிடம் அமித் ஷா சொன்னாராம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick