அழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன!

அனல் கக்கும் அழகிரியின் ‘மனசாட்சி’

“அண்ணன் அழகிரி, தி.மு.க-வுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது போலவும், அவரால் கட்சி வளர்ச்சியடையவில்லை என்பது போலவும் சிலர் பேசிவருகிறார்கள். அண்ணன் எப்போதுமே, தான் செய்த விஷயங்களை வெளியே சொல்லமாட்டார். தற்போதைய சூழலில், அவற்றையெல்லாம் நாங்கள்  கூற வேண்டியுள்ளது. ஸ்டாலின் வகித்த பொருளாளர் பதவி, துணை முதல்வர் பதவி என அனைத்துமே அழகிரி அண்ணனின் ஒப்புதலில் கிடைத்தவைதான்’’ என்று அதிரடியாகப் பேச ஆரம்பித்தார், அழகிரியின் ‘மனசாட்சி’ என்று சொல்லப்படும் மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவரான இசக்கிமுத்து

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்காக சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி அழகிரி தலைமையில் அமைதிப்பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இது, தி.மு.க-வுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இசக்கிமுத்துவிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick