“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது!” | Kerala Finance Minister interview about IAE aid - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது!”

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. அந்த நிதியை மத்திய அரசு பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் பேசினோம்.

“ஐக்கிய அரபு அமீரகம் வழங்க முன்வந்துள்ள ரூ.700 கோடியை மத்திய அரசு பெற்றுக்கொள்ளாது என்று தகவல் வெளியாகியுள்ளதே?”

“ஐக்கிய அரபு அமீரகம் தரும் நிதியை வாங்குவதை மரியாதைக் குறைவு என மத்திய அரசு கருதினால், அதற்கு ஈடான தொகையை கேரளத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள ரூ.700 கோடி, கத்தார் அறிவித்துள்ள ரூ.35 கோடி மற்றும் மாலத்தீவுகள் அறிவித்துள்ள ரூ.35 லட்சம் ஆகிய வெளிநாடுகளின் நிதி உதவிகளை மறுப்பது நியாயமில்லை. 2016-ல் வெளியிடப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் இதுபற்றித் தெளிவாக இருக்கிறது. ‘பேரிடர் காலங்களில் உதவி கேட்டு வெளிநாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கக் கூடாது. வெளிநாட்டு அரசுகள் நல்லெண்ண அடிப்படையில் உதவிசெய்ய முன்வந்தால், அதை தாராளமாக ஏற்கலாம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick