கொள்ளிடத்தில் பெருவெள்ளம்... கிராமங்களில் மரண பயம்!

காவிரியில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அதைக் ‘கொள்ளும் இடம்’ என்பதால்தான், ‘கொள்ளிடம்’ என்றே இந்த ஆற்றுக்குப் பெயர் வைத்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, வினாடிக்கு 2.35 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் விடப்பட்டதால், கரைபுரண்டு ஆர்ப்பரித்து வரும் தண்ணீர், உடைப்பெடுத்து ஊருக்குள் புகுந்துவிடுமோ என்று கரையோர மக்கள் பெரும் அச்சம் கொண்டிருந்தனர். 

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் வரும் அதிகப்படியான தண்ணீர், திருச்சி அருகே முக்கொம்புவரைதான் வரஇயலும். அதன்பின், காவிரி ஆறு குறுகிவிடுவதாலும், காவிரியின் கரைகள் பலவீனமாக இருப்பதாலும், பெருக்கெடுத்துவரும் தண்ணீரை, கொள்ளிடத்தில் திருப்பிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், பல கிராமங்களில் மரண பயத்தை ஏற்படுத்தியது. 

தீவுகளாகிய கிராமங்கள்!

கொள்ளிடக் கரை அருகிலுள்ள வெள்ளமணல், அளக்குடி, வாடி, முதலைமேடு திட்டு, நாதல்படுகை ஆகிய தாழ்வான கிராமங்களுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. அந்தக் கிராமங்கள் தீவுகள்போல் காட்சியளிக்கின்றன. மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முதலைமேடு திட்டு, நாதல்படுகை கிராமத்தினர் ஊரைவிட்டு வெளியேற மறுத்துவிட்டனர். அதை அறிந்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், எஸ்.பி விஜயக்குமார் ஆகியோருடன் விசைப்படகில் முதலைமேடு திட்டுக்கு விரைந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அந்த மக்களை அமைச்சர் சமாதானம் செய்தனர். அதன்பின், சுமார் 700 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 10 படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்