“சுதந்திரம்னா என்னானு தெரியலைங்க..!” - கத்தரிக்கப்பட்ட ஒரு மலையின் சோகம்

ட்டு வழிச் சாலை அமைப்பதற்குப் பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி இறைக்கிறார்கள். அந்தச் சாலை அமையும் சேலம் அருகே, சாலையும் மின்சாரமும் இல்லாமல் வேற்றுக்கிரக வாசிகளைப் போல வசித்துவருகிறார்கள் தமிழ் மக்கள். இது ‘கத்திரிமலை’யா... அல்லது, அரசு நிர்வாகத்தால் கத்தரிக்கப்பட்ட மலையா என்று யோசித்தபடியே கத்திரிமலையில் நம் பயணத்தைத் தொடங்கினோம். நாம் அங்கு சென்றது நம் நாட்டின் சுதந்திர தினத்தில்.

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதிக்கு உட்பட்ட 37 குக்கிராமங்களில் ஒன்று கத்திரிமலை. இது இருப்பது ஈரோடு மாவட்டமாக இருந்தாலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டூர் மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளைக் கடந்துதான் அங்கு செல்ல முடியும். கொளத்தூரிலிருந்து கத்திரிமலையின் அடிவாரமான லக்கம்பட்டிக்குச் சென்று, அடிவாரத்திலிருந்து செங்குத்தான மலையில், கரடுமுரடான பாதையில் சுமார் ஏழு கி.மீ நடந்து சென்றால்தான், கத்திரிமலையை அடைய முடியும். வெறும் ஏழு கி.மீ தானே என்று எளிதாக நினைக்க முடியாது. கத்திரிமலையைச் சேர்ந்த பழங்குடிகளுக்கு, அடிவாரத்திலிருந்து மேலே நடந்து செல்ல மூன்று மணி நேரம் பிடிக்குமாம். நாம் ஒருவழியாக ஆறு மணி நேரத்தில் அங்கு சென்றடைந்தோம். முட்டி தேய்ந்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick