‘‘லஞ்சம் மட்டுமே ரூ.2,400 கோடி!’’ - சந்திக்கு வரும் சத்துணவு ஊழல்

- சக்திவேல்

‘‘தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருள்களை விநியோகித்துவரும் ‘கிறிஸ்டி ஃபுட்ஸ்’ நிறுவனம், இந்த கான்ட்ராக்டுகளுக்காக ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்திருப்பது வருமானவரித் துறையின் ஆவணங்களின் மூலம் அம்பலமாகியிருக்கிறது” என்றொரு தகவல் கசிந்து, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

“2011-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசின் ‘மெகா ஊழல்’ என்று எதிர்க்கட்சியினர் உள்பட பலரும் இதை விமர்சிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இயங்கிவருகிறது கிறிஸ்டி ஃபுட்ஸ் நிறுவனம். 1989-ம் ஆண்டு, ராசிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் ஆரம்பித்த இந்த நிறுவனம், 1992-ம் ஆண்டு முதல், சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை, பருப்பு உள்ளிட்ட பொருள்களை விநியோகிக்கத் தொடங்கியது. இதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருள்களை இந்நிறுவனம் விநியோகித்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick