சொந்த கிராமத்தில் அகதிகளான சோகம் - நாகை வேதனை | People affects by Gaja cyclone - Junior Vikatan | ஜூனியர் விகடன்

சொந்த கிராமத்தில் அகதிகளான சோகம் - நாகை வேதனை

டெல்டா மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் சீரழித்த கஜா புயல், அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. நிவாரண உதவிகளும், மீட்பு நடவடிக்கைளும் ஆமை வேகத்தில் இருப்பதால் எங்கும் இயல்புநிலை திரும்பவில்லை.

உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டிருக் கிறார்கள் மக்கள். சீரமைப்புப் பணிகளைப் பார்வையிடச் செல்லும் அமைச்சர்கள், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வேகமாகச் செல்கின்றனர். இந்த அணிவகுப்பே மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. வேட்டைக்காரனிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுமதி, “கட்டுன துணியோட பத்து நாளா பிச்சைக்காரங்கபோல இருக்கோம்.  ஹெலிகாப்டர்ல வந்து பார்க்கும் முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா?” என்றார் கோபமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick