மொழிபெயர்ப்பில் குளறுபடிகள்... நீட் தேர்வில் அநீதி!

மௌனம் காக்கும் எடப்பாடி அரசு

‘இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், தமிழ் வினாத்தாளில் காணப்பட்ட குளறுபடிகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவுடன் தமிழ்வழியில் படித்துவரும் மாணவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வை 11.04 லட்சம் மாணவர்கள் எழுதினர். அவர்களில், 24,720 மாணவர்கள் தமிழ் வழியில், தமிழ் வினாத்தாளைப் பயன்படுத்தி எழுதினர். ஆங்கில வினாத்தாளை மொழிபெயர்த்து, மாநில மொழிகளில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. தமிழ்க் கேள்வித்தாளில், 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. உதாரணமாக, சிறுத்தையை ‘சீத்தா’ என்று மொழிபெயர்த்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick