உ.பி. பெயர் மாற்றங்கள்... வெறுப்பு அரசியலைத் தவிர வேறென்ன இருக்கிறது யோகி?

- சக்திவேல்

த்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘அலகாபாத்’ நகரின் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என்று மாற்றியபோது, சாதாரணமாகத்தான் தெரிந்தது. ஆனால், அடுத்தடுத்து ‘முகல் சராய்’ சந்திப்பு, ‘தீனதயாள் உபாத்யாய் மார்க்’ சந்திப்பு என்று மாறியது. ‘ஃபைஸாபாத்’ அயோத்யா ஆனது. இன்னும் பெயர்ப் பட்டியலை எடுத்து, தூசுத் தட்டிவருகிறார்கள். யோகியின் ‘நாம்வாப்சி’ (பெயர் மாற்றம்) எக்ஸ்பிரஸ் செல்லும் வேகத்தைப் பார்த்தால், அது தேசத்தையே தடம் கவிழ்த்துவிடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது.

ஊர்ப் பெயர்களை மாற்றி விளையாடுவது யோகிக்குப் புதிதல்ல. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே, இதை ஆரம்பித்துவிட்டார். ‘ஹூமாயூன்’ நகரை ‘ஹனுமன்’ நகர் ஆக்கினார்். ‘மியான்’ பஜாரை ‘மாயா’ பஜார் ஆக்கினார். ‘அலி’ நகரை ‘ஆர்யா’ நகர் ஆக்கினார். ‘உருது’ பஜார் என்பதை ‘ஹிந்தி’ பஜார் ஆக்கினார். இப்போதும் அசராமல், ‘தேவைப்பட்டால் தாஜ்மஹால் என்ற பெயரை ‘ராம் மஹால்’ என்று மாற்றுவேன்’ என்கிறார். பெயரை மாற்றும் அரசியல் ஒன்றும் இங்கு புதிதல்ல. சென்னை தொடங்கி புதுடெல்லி வரை நெடிய வரலாறு இருக்கிறது. ஆனால், யோகி நிகழ்த்திவரும் பெயர் மாற்றத்தில் இருக்கும் ஓர் அச்சுறுத்தல்... பழைய பெயர்கள் எல்லாம் இஸ்லாமியப் பெயர்களாக இருப்பதும், புதிய பெயர்கள் எல்லாம் இந்துப் பெயர்களாக இருப்பதும்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick