நெருக்கடியில் நெதன்யாஹு... இஸ்ரேல் இறுதி நிலவரம்...

- கே.ராஜு

1960-ம் ஆண்டு. அர்ஜென்டினா நாட்டில் பதுங்கியிருந்தார், நாஜி போர்க் குற்றவாளி அடால்ப் ஐக்மான். அந்நாட்டில் ரகசியமாக ஊடுருவி, அடால்ப் ஐக்மானை வேட்டையாடி உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத். ஆனால் இன்று, மொசாத் செய்த சிறு தவறால் இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளின் எல்லைப் பகுதியில் வன்முறை வெடித்ததுடன், இஸ்ரேல் நாட்டின் ஆட்சியே கவிழும் நிலை உண்டாகியுள்ளது. இது நான்காவது முறையாகப் பிரதமராக நீடித்துவரும் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது.

காஸா பகுதிக்குள் நவம்பர் 11-ம் தேதி ஊடுருவிய இஸ்ரேல் ராணுவ உளவுப் படை வீரர்கள், தங்களைத் தடுத்த ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பித்தனர். இதனால் வெகுண்டெழுந்த ஹமாஸ் அமைப்பினர், 400 ஏவுகணைகள் மற்றும் மார்டர் குண்டுகளை இஸ்ரேலின் மீது ஏவினர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல், 160 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸின் ராணுவத் தளவாடங்கள், ஆயுதக்கிடங்குகள் மற்றும் அதன் தலைமையகத்தைத் தரைமட்டமாக்கியது. மக்கள் குடியிருப்புகளும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இந்த ஆண்டில் இது நான்காவது தாக்குதல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்