பள்ளி மாணவர்கள் செய்த ஆணவக்கொலை!

மிழகத்தில் அடுத்தடுத்து ஆணவக்கொலைகள் நடந்துவரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களே ஒன்றுசேர்ந்து ஆணவக்கொலை செய்திருப்பது பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுவரை பழைமைவாதிகளிடம் மட்டுமே இருப்பதாக நம்பப்படும் சாதிவெறி, இன்றைக்கு பள்ளி மாணவர்களிடமும் பரவியிருப்பது, தமிழகத்தில் ஆணவக்கொலை தொடர்பாக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

நெல்லை மாவட்டம், வெள்ளங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி சங்கர். 32 வயதாகும் இவர், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். நவம்பர் 20-ம் தேதி காலையில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற இசக்கி சங்கர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அந்தக் கொலையைச் செய்தவர்கள் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து அதிர்ந்துபோயினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick