சாதனைப் பெண்களை அலங்கரித்த ‘அவள் விருது!’

த்தமது துறைகளில் சிறகு விரித்து வான் நோக்கி உயர்ந்துகொண்டிருக்கும் தேவதைகளை அங்கீகரித்து அழகு பார்க்கும் `அவள்’ விருதுகளின் இரண்டாம் ஆண்டு நிகழ்வு, நவம்பர் 24-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஆர்.ஜே `லவ் குரு’ ராஜவேலுவும், வி.ஜே அபிராமியும் இணைந்து நிகழ்வைத் தொகுத்து வழங்கினர்.

சாத்தியமற்றது எனச் சொல்லப்பட்ட மென்பொருள் துறைத் தொழிற்சங்கத்தை அமைத்துக்காட்டிய வசுமதிக்கு, `செயல் புயல்’ விருது வழங்கப்பட்டது. விருதை வழங்கவந்த ‘நாம் தமிழர்’ கட்சி சீமானிடம், `சமூக வலைத்தளங்களில் உங்கள் மேடைப் பேச்சுக்குக் கிடைக்கும் பாராட்டுகள், கிண்டல், கேலிகளை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்’ என்று கேட்டார் ராஜவேலு. அதற்கு, ‘‘தம்பி... லெனின் என்ன சொல்றார்னா, ‘உன்னை விமர்சிக்கிறவன்கிட்ட உன்னை நிரூபிக்கப் போராடதே’ன்னு சொல்றாரு. விவேகானந்தர் என்ன சொல்றாரு? ‘மத்தவங்க உன்னைப் புகழும்போது வாயையும், இகழும்போது காதையும் பொத்திக்க’ன்னு சொல்றாரு. அவ்வளவுதான்’ என்று சிரித்தவாறு கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick