திக்கின்றி தவிக்கும் திருநங்கைகள்! - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் குறித்த விழிப்பு உணர்வு ஒப்பீட்டளவில் கடந்த காலத்திலிருந்து முன்னேறியிருக்கிறது. முதல் திருநங்கை வழக்கறிஞர், முதல் திருநங்கை போலீஸ் அதிகாரி என்று சமூகம் வளர்ச்சி அடைந்தாலும், அவர்களுக்கான இருப்பிடம் இன்றளவிலும் சிக்கலாகவே இருக்கிறது. ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சுமார் 255 திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் பத்தே நாள்களில் வழங்கப்படும்’ என்று தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. ஆனால், ஐந்து மாதங்களாகியும் அது தொடர்பான செயல்பாடுகள் ஆமை வேகத்திலேயே இருப்பதாகப் புகார் தெரிவிக்கிறார்கள் திருநங்கைகள் தரப்பினர்.

இதுபற்றிப் பேசிய பொறியியல் பட்டதாரியும் செயற்பாட்டாளருமான கிரேஸ் பானு, “நான் தமிழகத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. படிப்புக்காக எனக்கு உதவி கிடைத்தாலும் நான் தங்குவதற்கான வீடு மட்டும் கிடைக்கவே இல்லை. கவுன்சிலிங்கில் எனக்கு அரக்கோணத்திலிருந்து திருத்தணி செல்லும் வழியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், பெசன்ட் நகரில் தங்கியிருந்த நான், எப்படி தினமும் அவ்வளவுதூரம் செல்ல முடியும். நிறைய வீடுகள் பார்த்தேன். இரட்டிப்பாக அட்வான்ஸ் பணம் கேட்டார்கள். பல இடங்களில், குடியேறிய ஒரே வருடத்தில் வீட்டைக் காலிசெய்யச் சொன்னார்கள். சென்னைக்கு வந்த ஏழு வருடங்களில் பதினான்கு வீடுகள் மாறிவிட்டேன்.  2014-ம் வருடம், திருவள்ளூர் பகுதி எர்ணாவூர் குடிசை மாற்று வாரியத்தில் 240 திருநங்கைகளுக்கான வீடுகளை முதன்முறையாக அரசு ஒதுக்கீடு செய்தது. நானும் என் திருநங்கைத் தோழி ஒருத்தியும் வீட்டுக்காகக் கோரிக்கை வைத்தபோது, குடிசை மாற்று வாரியத்தில் மறுத்துவிட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick