“இலவசங்கள் அல்ல... சமூக நலத் திட்டங்கள்!”

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் நாராயண்

‘சர்கார்’ படம் தொடர்பான சர்ச்சைகள் ஓய்ந்தாலும், பொதுவெளியிலும் அறிவு சார்ந்த தளங்களிலும் அது கிளப்பிய ‘இலவசங்களை ஒழிப்பது’ தொடர்பான விவாதங்கள் ஓயவில்லை. இந்த நிலையில், ‘திராவிடத்தின் ஆண்டுகள்: தமிழகத்தின் அரசியல் மற்றும் நலன்’ (‘The Dravidian Years: Politics and Welfare in Tamilnadu’) என்ற புத்தகத்தை எழுதிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான நாராயணைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘உங்களைப் பற்றியும்... உங்கள் புத்தகத்தைப் பற்றியும்...”

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரியாக 1965-ம் ஆண்டு தமிழகத்தில் பணியைத் தொடங்கினேன். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிகளில் அவர்களுடன் பணியாற்றியுள்ளேன். 1977-ல், அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்று முதல்வர் ஆனபோது, அந்த மாவட்டத்தின் கலெக்டர் நான். மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர், பிரதமர் வாஜ்பாய் அரசின் பொருளாதார ஆலோசகர் என்று பணிபுரிந்துள்ளேன். இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். திராவிடக் கட்சிகள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. கடந்தகால ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படையில், இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick