ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஆஹான்

 Sivakumar Sankarlingam
ஜீ... பூம்... பா என்றவுடன் மின்கம்பங்களை நடமுடியாது. - முதல்வர் எடப்பாடி.

ஜீ... பூம்... பா என்றவுடன் நீங்கள் முதல்வராகிவிட்டீர்களே!

Kanagaraj Karuppaiah
உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரிந்தால், அவன் தொழிலாளி. ஹெலிகாப்டர் போகாதுன்னு திரும்பிவந்தா... ‘விவசாயக் குடும்பத்திலிருந்து’ வந்த முதலமைச்சர்.

 Jeyachandra Hashmi

இந்தா ஆரம்பிச்சுட்டாய்ங்க... ரஜினி எவ்ளோ கொடுத்தாரு... விஜய் எவ்ளோ கொடுத்தாரு... அஜித் ஏன் இன்னும் எதுவும் கொடுக்கலன்னு.

நமது இந்த சிறுபிள்ளைத்தனங்களின் பின்னால்தான் ஒளிந்துகொள்கின்றன... அரசுகளின் சில்லரைத்தனங்கள் !!

Barathi Thambi
டெல்டா மாவட்டத்தின் எந்தத் தெருவில் நுழைந்தாலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் முகாம் என்ற பெயர் பலகைகள் அரை கிலோமீட்டருக்கு ஒன்று தென்படுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் முகாம்கள். நிவாரண வண்டிகளின் கண்களில் தென்பட வேண்டும் என்பதற்காக... அவர்களின் இரக்கத்தைக் கோர வேண்டும் என்பதற்காக... உள்ளடங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், முதன்மை சாலை அருகே அகதிகளைப்போல காத்திருக்கின்றனர். வாகனங்களை நோக்கி கைகளை நீட்டியபடி ஓடிவருகின்றனர். இந்தக் காட்சி ஒவ்வொன்றும் நெஞ்சை அறுக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick