வணக்கம்...

புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. துயர் துடைக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறது விகடன். இதற்காக, விகடனின் ‘வாசன் அறக்கட்டளை’ சார்பில் 10 லட்ச ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் சடையன் கோட்டகம், முதலியார் தோப்பு, வைரவன் பேட்டை, அண்ணா நகர், விழுந்தமாவடி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 500 ஏழைக் குடும்பங்களுக்கு ‘விகடன் சாரிட்டபிள் டிரஸ்ட்’ மூலமாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து உதவிசெய்து வருகிறோம். உதவும் உள்ளம்கொண்ட வாசகர்கள் ‘Vasan Charitable Trust’ என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு, செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052  (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோடு: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண்: 443380918     (ஐ.எஃப்.எஸ்.சி கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்:  DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும். 

வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘கஜா துயர் துடைப்போம்,’ அல்லது #RestoreDelta என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம். மெயிலில் ரசீது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் help@vikatan.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வங்கியில் பணம் செலுத்திய (Transaction No: / Reference No:) பரிவர்த்தனை எண்ணைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

வாருங்கள்... நம் சகோதரர்களின் துயர் துடைப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick