சபரிமலையில் சரிந்த வருமானம்!

னைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கும் விவகாரத்தை யொட்டி ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து, ஐயப்பன் கோயிலில் கணிசமாக வருமானம் குறைந்துள்ளது. இது தொடர்பாக, ஆளும் தரப்பினரும் பி.ஜே.பி-யினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.

ஐயப்பன் கோயிலில் வருமானம் குறைந்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு வட்டாரத்தில் பேசினோம். “கேரளத்தில் திருவிதாங்கூர், கொச்சி என இரண்டு தேவசம்போர்டுகள் உள்ளன. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் 1,249 கோயில்கள் உள்ளன. அவற்றில், சபரிமலை உள்ளிட்ட 61 கோயில்களில் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு 2017-18 நிதியாண்டில் ரூ.683 கோடி வருவாய் வந்தது. அதில் அனைத்துக் கோயில்களுக்கான செலவுகள், ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் என ரூ.678 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick