கழுகார் பதில்கள்! - தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

சா.சொக்கலிங்கம் ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
கழுகாருக்குப் பிடித்த டி.வி சேனல் எது?


டிஸ்கவரி!

@ஜி.மத்தியாஸ், ஒன்டாரியோ, கனடா.
தமிழகம், சினிமா மாயையிலிருந்து விடுபட வருங்காலத்தில் வாய்ப்பு உள்ளதா?


‘சோஷியல் மீடியா மாயை’ இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்போது விடுபடும்.

எம்.கார்த்திகா, அரியலூர்.
நடிகர்கள் பலரும் தமிழக அரசை நம்பாமல், புயல் நிவாரணப் பொருள்களை நேரடியாகவே அனுப்பிக் கொண்டுள்ளனரே?‌‌‌‌‌‌‌‌‌‌‌‌


அரசை நம்பாமல் என்று ஏன் சொல்லவேண்டும். உதவியைப் பெற்ற கண்களில் தெரியும் ஒளியை நேரடியாக உணர்வதற்காகக்கூட இருக்கலாம் அல்லவா?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.
“பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன” என்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி?


உண்மைதான். ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மீன, மேஷம் பார்த்துக்கொண்டிருப்பதுதான் நம்பிக்கையைக் குலைக்கிறது. அதிலும் மின்னல் வேகத்தைக் காட்டியிருந்தால், வரும் தேர்தலுக்குப் பயன்பட்டிருக்கும். இப்போதுகூட ஒன்றும்கெட்டு விடவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick