மிஸ்டர் கழுகு: நம்மைச் சிதறடிக்க வாய்ப்பு கொடுக்கலாமா? - துரைமுருகனிடம் கடுகடுத்த ஸ்டாலின்!

‘‘பட்சிராஜா வந்திருக்கேன்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

“ ‘2.O’ பாதிப்போ... சரி, தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதே?’’

‘‘கூட்டணிப் பிரச்னை எழுந்திருக்கும் நேரத்தில், இந்தக் கூட்டத்தை தி.மு.க கூட்டியுள்ளது. ‘தி.மு.க-வுடன் இணைந்துத் தேர்தலைச் சந்திப்போமா என்ற சந்தேகத்தில் இருந்த கட்சிகள், இந்தக் கூட்டத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளன.’’

‘‘திருமா, வைகோ இருவருமே ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்களே?’’

‘‘அவர்களின் வருத்தத்தை ஏற்கெனவே நாம் சொல்லியிருந்தோம். இந்த நிலையில், முதல்நாள் திருமாவளவனும் மறுதினம் வைகோவும் ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்கள். துரைமுருகன் பேச்சுக்குப் பின்பு, திருமா தரப்பிலிருந்துதான் ஸ்டாலின் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளார்கள். ஸ்டாலின் நேரம் கொடுத்ததுடன் அந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, துரைமுருகன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். திருமா உள்ளே நுழைந்ததும் எடுத்த எடுப்பில் ஸ்டாலின், ‘நீங்கள் எங்கள் அணியில்தான் இருக்கிறீர்கள்’ என்று சொல்லியதும் சிரித்துள்ளார் திருமா.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick