என்ன செய்தார் எம்.பி? - ஜெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி) | Thoothukudi ADMK MP ‎Jeyasingh Thiyagaraj Natterjee activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

என்ன செய்தார் எம்.பி? - ஜெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
“ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நான்தான்!”ஓவியம்: கார்த்திகேயன் மேடி

#EnnaSeitharMP
#MyMPsScore

ழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக தனது புல்லட்டில் வருவார் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி. பெயரில்தான் வடக்கு சாயலே தவிர, சாட்சாத் நம்மூர் முகம்தான். புல்லட்டை டீக்கடையோரம் நிறுத்திவிட்டு, சக வக்கீல்களுடன் அரட்டையடித்துகொண்டிருப்பார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மூலமாக அ.தி.மு.க வேட்பாளர் ஆனவர், எம்.பி-யாகவும் வெற்றி பெற்றார். தன்னை வெற்றிபெற வைத்த தூத்துகுடி மக்களுக்கு என்ன செய்தார் எம்.பி?

தொகுதிக்குள் வலம்வந்தபோது எதிரே வந்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளாத்திகுளம் செயலாளர் புவிராஜ். “குளத்தூர், எட்டையபுரம், புதூர், பூதலாபுரம் பகுதிகளில் அரசுப் பள்ளிக் கட்டடங்கள் பல, இடியும் நிலையில் உள்ளன. ஒரு பள்ளிக் கட்டடத்தைக்கூட எம்.பி கட்டிக்கொடுக்கவில்லை. வருடத்துக்கு 50 லட்சம் ரூபாய், பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவுசெய்ய வேண்டும். இவரோ, வெறும் டேபிள், சேர்களை மட்டுமே வாங்கிக்கொடுத்துள்ளார். கட்டடமே இல்லாத நிலையில், டேபிளும் சேரும் எதற்கு? விளாத்திகுளத்தில் பெரும்பாலும் மானாவாரி விவசாயம்தான். மிளகாய் வத்தல், மல்லி சாகுபடி அதிகம். மானாவாரி விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் வத்தல், மல்லி சேமிப்பு கிட்டங்கிகளைக் கூடுதலாக உருவாக்கவும், கொள்முதல் நிலையம் அமைக்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘விளாத்திகுளத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்’ என்பது நீண்டநாள் கோரிக்கை. அதற்கான முயற்சிகளும் எடுக்கப் படவில்லை. விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் நிலை ரொம்ப மோசம். அங்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். அவசர சிகிச்சை வசதி இல்லாததால், நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick