“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி | Human rights activist Sanmaster interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி

- சக்திவேல்,

ஈழ மண்ணில் சிவில் இயக்கங்களைக் கட்டமைப்பதிலும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டுவருபவர், மனித உரிமைச் செயற்பாட்டாளரான சண்மாஸ்டர் என்கிற விஜேந்திரகுமார். இலங்கையில் இருந்தபடியே போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரித்து, ஐ.நா மன்றத்துக்கு அனுப்பி அதிர்வலைகளை ஏற்படுத்தியவர். ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையிலிருந்து தப்பித்து, சிறிது காலம் தலைமறைவாக இருந்து, 2014-ன் இறுதியில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தார். அவரைச் சந்தித்து உரையாடினோம்.

“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தற்போது அங்கு சிங்களத் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இதில், இன அழிப்புப் போரை நடத்திய ராஜபக்சேவும் அப்போதைய ராணுவ அமைச்சர் மைத்ரியும் ஒரு பக்கம் நிற்கின்றனர். ‘அந்தப் போரின் வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்தவன் நானே’ என்று சொல்லும் ரணில் மற்றொரு பக்கம் நிற்கிறார். ராஜபக்சேவுக்கும் ரணிலுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick