கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/12/2018)

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

@டி.சிவக்குமார், சீலப்பாடி, திண்டுக்கல்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின்... கூட்டணிக் கட்சிகளை அனுசரித்து, அரவணைத்துச் செல்வதில் யார் கில்லாடி?


இரண்டாமவர், ஆரம்பிக்கவே இல்லையே.

எம். பாஸ்கர், தேவகோட்டை.
‘2.0?


‘செல்’லினம் Vs ‘புள்’ளினம்.

@பூ.கோகுல்குமார், கோவை.
தமிழகத்தில் தற்போது ஆட்சியைத் தக்கவைப்பது பணமா, விசுவாசமா?

விசுவாசமா... எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?

@ச.த.ஜெயசுதாகர், திருவாரூர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ‘ஆதி திராவிடர் கஜா புயல் முகாம்’ என்று தனியாக முகாம் அமைத்திருப்பது சரியான நடவடிக்கையா?


சாதிகளை வேரறுக்கப் புறப் பட்டதாகக் கூறிக்கொள்ளும் திராவிட இயக்கங்களின் ஐம்பது ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகும் இந்த நிலை நீடிப்பது, சாதி ஒழிப்பு, தோல்வி யில் முடிந்துவிட்டதையே காட்டுகிறது. காரணம், அந்த இயக்கத்தினரில் பெரும் பாலானவர்களின் நோக்கம் சொத்து சேர்ப்பதை நோக்கித் திசை திரும்பியதுதான். அதனால்தான், ஆதி திராவிடர் களுக்கு ஒன்றிரண்டு அமைச்சர் பதவிகளைத் தந்துவிட்டால் போதும் என்று தொடர்ந்து ஆட்சிகளை நடத்திக் கொண் டுள்ளனர்.

@கார்த்திகேயன்கவிதா

மேக்கேதாட்டூ என்ற இடத்தில் காவிரியில் அணைக் கட்டுவதற்கான முயற்சிகளைத் தற்போது ஆரம்பித் திருப்பது, கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கையா?


இருக்கலாம். அல்லது எல்லோர் கவனமும் கஜா பாதிப்பின் பக்கமே படிந்திருக்கும் இந்த நேரத்தில், பல விஷயங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பதாகவும் இருக்கலாம்.

@முத்துக்கிருஷ்ணன், வேலூர்-7.
தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிற துவேஷங்களுக்கு எதிராக அங்கு நேரில் சென்று போராடினார் காந்தி. அதேபோல சீமான், வைகோ போன்றோர் இலங்கைத் தமிழர்களுக்காக இலங்கைக்கே சென்று போராட வேண்டியதுதானே?


சே குவேரா நாடு நாடாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து போராடினார். அவர்களின் காலம் வேறு... இன்றைய காலம் வேறு. இன்றுபோல் விசா உள்ளிட்ட கெடுபிடிகள் அன்று கடுமையாக இல்லை. இன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் விமானத்தில் ஏறவே உள்நாட்டில் அனுமதிப்ப தில்லை. இவ்வளவு ஏன் உள்நாட்டில் போராடினாலே... ‘ஆன்ட்டி நேஷனல்’ என்று முத்திரைகுத்திச் சிறையில் அடைத்துவிடுகிறார்களே. உலகம் எங்கும் பாசிசம் அத்தனை கொடூரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close