ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்! | okhi cyclone affected people still not recovered - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/12/2018)

ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!

ன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ஒகி புயல், விட்டுச்சென்ற வேதனைகள், வலிகள், துயரங்களைச் சொல்லில் அடக்க முடியாது. ஒகி புயல் 2017-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி நள்ளிரவில் ஆரம்பித்து, நவம்பர் 30-ம் தேதி மதியம் கரையைக் கடந்த, அந்தச் சில மணி நேரங்களில், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை உருக்குலைந்துபோனது. ஒகி புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற 162 பேர் வீடு திரும்பவில்லை. அவர்களில்,  24 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. மீதி நபர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. 

“அண்ணன், அப்பா கிறிஸ்டோபர், என் புருசன் மில்டன் என 11 பேர் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில இருந்து மீன்பிடிக்கப் போனாங்க. யாருமே திரும்ப வரல. எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. ‘எங்ககூடப் படிக்கிற எல்லாரோட அப்பாவும் வீட்டுல இருக்காங்க, நம்ம அப்பா எங்கம்மா’னு பிள்ளைங்க கேட்கும்போது தினமும் அழுகுறேன். பிள்ளைங்க மனசு வாடிடக் கூடாதுன்னு, அப்பா வெளிநாட்டுல வேலைக்குப் போயிருக்காருன்னு சொல்றேன்” என விம்முகிறார், சின்னத்துறையைச் சேர்ந்த ஷர்மிளா.

[X] Close

[X] Close