விற்கப்படும் குழந்தைகள்! - வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன் | Drought in Afghanistan - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/12/2018)

விற்கப்படும் குழந்தைகள்! - வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன்

- கே.ராஜு

40 ஆண்டுகால உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதத் தாக்குதல்களால் உருக்குலைந்த ஆஃப்கன் மக்கள், இப்போது வரலாறு காணாத வறட்சியால் உணவின்றித் தவிக்கிறார்கள். பசியின் கொடூரக் கரங்கள் அங்கே குழந்தைகளைக்கூடச் சந்தையில் விற்கவைத்திருக்கின்றன.

ஆறு வயது பெண் குழந்தை அவள். அவளின் தாய், தன் குழந்தையை இன்னொருவரிடம் ஒப்படைக்கிறார். அழுது கொண்டே தாயைப் பிரிந்து செல்கிறது, அந்தக் குழந்தை. அவளின் தாயும் அழுதுகொண்டே அவளை வழியனுப்பி வைக்கிறார். இனி, அழுதுபுரண்டாலும் தன் அம்மாவைப் பார்க்க முடியாது, தாம் இன்னொருவருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டோம் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாது.  

கடைசரக்குபோல விற்கப்பட்ட அந்தக் குழந்தையின் பெயர் அஹிலா. அஹிலாவின் தாய் மமரீன், ஆஃப்கனின் ஹெரத் நகரத்துக்கு அருகேயுள்ள ஓர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தவர். “என் கணவர், தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார். உதவி கிடைக்கும் என்று நம்பி, சொந்த ஊரைவிட்டு வெளியேறி வந்தேன். இங்கும் உதவி கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு  உணவில்லை.   வேறுவழியில்லாமல் குழந்தையை விற்றுவிட்டேன்” என்று மமரீன் அளித்த பேட்டி, அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. மமரீனின் இந்த வார்த்தைகள், உலகையே உலுக்கியிருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close