அ.ம.மு.க ஆபீஸில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு...

சிக்கலில் அமைச்சரின் அக்கா மகன்!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆலாங்குப்பத்தில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அ.ம.மு.க நிர்வாகிகள் இருவர் கள்ளநோட்டு அச்சடித்து விநியோகித்துவந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலாங்குப்பத்தில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் கடந்த 2-ம் தேதி ஓர் இளைஞர் இரண்டாயிரம்  ரூபாய் நோட்டை மாற்றியுள்ளார். அந்த நோட்டைப் பார்த்த கடைக்காரருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சிக்கப்போகிறோம் என்பதை உணர்ந்து, அந்த இளைஞர் ஓட்டம் பிடித்தார். கடைக்காரர் கூச்சலிடவே பொதுமக்கள் அவரை விரட்டிப்பிடித்தனர். அவரிடம் மேலும் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அத்தனையும் கள்ளநோட்டுகள். அந்த இளைஞரை ஆம்பூர் போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் விசாரித்தபோது, அவரது பெயர் சதாம் உசேன் என்பதும், சென்னை மூலக்கடையைச் சேர்ந்த அவர், ஜோலார்பேட்டையில் உள்ள தன் மாமியார் வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick