‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’ - சீமான் நம்பிக்கை

பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26-ம் தேதியை தமிழ் இன எழுச்சி, மீட்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். ரத்ததான முகாம், கறி விருந்து, கருத்தரங்கம் என்று தடபுடல் விழாவுக்கு இடையே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“தமிழ்நாட்டில், 2009 காலக்கட்டத்தில் ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சியாக இருந்தது. 2018-ல் அந்த எழுச்சி குறைந்துள்ளதா?”

“தமிழ்நாட்டு கட்சித் தலைவர்களுக்கு இடையே, ‘யார் தமிழினத்துக்குத் தலைவனாவது?’ என்கிற போட்டியில், எங்கள் அண்ணன் பிரபாகரனை பயங்கரவாதியாகச் சித்தரித்தனர். எங்களைப் போன்ற ஈழ ஆதரவாளர்களை, ‘புலிகளிடமிருந்து கோடி கோடியாகப் பணம் வாங்குகிறார்கள்’ என்று கொச்சைப்படுத்தினர். இப்படிப் பரப்பப்படும் அயோக்கியத்தனமான கருத்துகளால், ஈழ எழுச்சி குறைந்திருப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. உண்மையில், லட்சக்கணக்கான தமிழ் பிள்ளைகளின் நெஞ்சில் நெருப்பாக அது அடைகாத்து வைக்கப்பட்டுள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick