“எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை... டாக்டர் அய்யா தலையிட வேண்டும்!” | Kaduvetti Guru's son interview about his family issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லை... டாக்டர் அய்யா தலையிட வேண்டும்!”

காடுவெட்டி குருவின் மகன் கண்ணீர்

பா.ம.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். எல்லாப் பிரச்னைகளுக்கும் கட்சித் தலைமைதான் காரணம் என்று குருவின் உறவினர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பா.ம.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், `‘சொத்துக்காக என் பிள்ளைகளை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள்’’ என்று குருவின் மனைவி லதாவின் கடிதம் வெளியாகி, பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தன் தாயை அவரின் உறவினர்களிடமிருந்து மீட்டுத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார், குருவின் மகன் கனலரசன்.

இந்த நிலையில், குருவின் மகள் விருத்தாம்பிகை, குருவின் தங்கை மகன் மனோஜ்கிரணைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய குருவின் மனைவி, இத்திருமணத்தில்  பங்கேற்கவில்லை. திருமணம் முடிந்தவுடன், “காடுவெட்டியைச் சேர்ந்த சிலர் எங்கள் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று போலீஸில் மனு அளித்தனர் மணமக்கள். இவர்களின் திருமணத்தை நடத்திவைத்த குருவின் அக்கா மீனாட்சி, “யாரைக் கேட்டுத் திருமணத்தை நடத்திவைத்தீர்கள் என்று காடுவெட்டியில் உள்ள சிலர் எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அச்சம் தெரிவித்தார். இதன் உச்சமாக, “பா.ம.க கட்சித் தலைமை எங்கள் குடும்பத்தை அழிக்கப் பார்க்கிறது” என்று குருவின் சகோதரிகள் எழுப்பிய குற்றம்சாட்டு பா.ம.க-வினர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குருவின் மகன் கனலரசனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick