15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்பு! - திருவண்ணாமலை திடுக்!

ருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து கண்டுபிடிப்பதும், சட்டவிரோதக் கருக்கலைப்புச் செய்வதும் குற்றம். இந்த டிஜிட்டல் யுகத்திலும்கூட ஆண், பெண் பாகுபாட்டு உணர்வில் ஊறிக்கிடப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இதனால், சட்டவிரோத ஸ்கேன் மையங்களும், கருக்கலைப்பு மையங்களும் ரகசியமாகச் செயல்பட்டு வருகின்றன. 

திருவண்ணாமலையில் பள்ளிப் படிப்பையே தாண்டாத ஆனந்தி என்ற பெண், தன் வீட்டில் நடத்திவந்த சட்டவிரோதக் கருக்கலைப்பு மையத்தில், 15 ஆண்டுகளில் சுமார் 19,000 சிசுக்களை அழித்திருப்பது, ஆன்மிகபூமியை அதிர்ச்சி பூமியாக்கியிருக்கிறது. இவர் ஏற்கெனவே இரண்டு முறை கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர். அதன் பிறகும், அந்தச் சட்டவிரோத நடவடிக்கையை அவர் நிறுத்தவில்லை. மீண்டும் கருக்கலைப்பு மையம் நடத்தி ஆரம்பித்து, இப்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பற்றி ஏற்கெனவே பல முறை ஜூ.வி-யில் எழுதியிருக்கிறோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick