வேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு?

சொத்துக்குவிப்பு, குட்கா, நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு என்று தமிழக முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள் வரை ஊழல் புகார்கள் குவிகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில், “வேலூரில் இருக்கும் ரூ.300 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார்” என்ற புகாரில் சிக்கியுள்ளார், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. இதில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பெயர்களும் அடிபடுகின்றன. இந்த விவகாரம், வேலூர் வட்டார அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபர பேச்சாச் சுழன்றுகொண்டிருக்கிறது.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வீரமணிக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவில், ‘‘ரூ.100 கோடி கமிஷனுக்கு ஆசைப்பட்டு, போலீஸை வைத்து எங்களை மிரட்டும் அமைச்சர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick