“வடநாட்டு வழிபாட்டு முறையைத் திணிக்கப் பார்க்கிறார்கள்!”

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை எதிர்க்கும் அமைப்புகள்

“சைவ சிந்தாந்தப் பிரிவைச் சேராத ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தஞ்சை பெரிய கோயிலுக்குள் தியானமோ பிரசாரமோ செய்வதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. ஆனால் , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அங்கு தியான நிகழ்ச்சி நடத்துவதற்கு மத்திய பி.ஜே.பி அரசு உள்நோக்கத்துடன் அனுமதி அளித்துள்ளது” என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில், டிசம்பர் 7, 8 தேதிகளில் ‘விஞ்ஞான பைரவம்’ என்ற பெயரில் தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கோயிலின் பிராகாரத்தில் பிரமாண்டமான பந்தல் அமைத்து, மூவாயிரம் பேர் அமர்வதற்கான இருக்கைகள்  போடப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தி.க., பெரிய கோயில் மீட்புக்குழு, தமிழ் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் டிசம்பர் 7-ம் தேதி காலையில், பெரிய கோயில் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick