கழுகார் பதில்கள்! - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்?

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
இரவு பகலாகக் காற்று, மழை, வெயில் பாராமல் சிறிதும் ஓய்வின்றி கஜா புயல் நிவாரணப் பணிகளில் உழைக்கும் மின்வாரிய ஊழியர்கள்?


புயலுக்குப் பின் அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகளில் போற்றுதலுக்குரியவை என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் மிகவும் போற்றுதலுக்குரிய பணி இவர்களுடையது. தமிழக மின்வாரிய ஊழியர்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலத்திலிருந்தும் வந்து அயராது  பாடுபட்டுக்கொண்டுள்ளனர். ‘கோயில் கட்டி கும்பிடப்பட வேண்டியவர்கள்’ என்று மக்களே பாராட்டுகிறார்கள்! சில ஊர்களில் கறி விருந்தெல்லாம் வைத்து அவர்களுக்கு மரியாதை செய்துள்ளனர் என்பதிலிருந்தே, காலத்தினாற் செய்யப்படும் இந்த உதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick