மிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக்?! - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...

ழக்கத்தைவிட, வேகமாக வந்த கழுகார், ‘‘விகடன் விருது நிகழ்ச்சிகளுக்காக நிறைய மீட்டிங் இருக்கிறது’’ என்றபடியே அவசர அவசரமாகத் தகவல்களை அடுக்கினார்.

‘‘சாராய ஆலை பணம், சுவிஸ் வங்கி ஆவணங்களில் மன்னார்குடி குடும்பம்... குறிப்பாக, சசிகலா பெயர் மீண்டும் அடிபடுகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதை மனதில் வைத்தே வருமானவரித் துறை மூலமாக அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு.’’

‘‘விளக்கமாகச் சொல்லும்.’’

“முதலில் சாராய ஆலை விஷயத்தை விளக்கிவிடுகிறேன். ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி-யான சுப்பிராமி ரெட்டி தமிழகத்தில் ஏகப்பட்ட பிஸினஸ்களை செய்துவந்தார். அவருடைய தம்பிகள் சுதாகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோர் இதையெல்லாம் முழுமையாகப் பார்த்து வந்தனர். சத்யம் சினிமாஸ், தற்போது ஹயாத் ரெசிடென்சி இருக்கும் ராமி மால், மதுபான ஆலை என்று அவர்களுடைய சொத்துகள் சென்னையில் நிறையவே உண்டு. இதில் சிலவற்றைத் தற்போது விற்றும் விட்டனர். ஆனாலும் பல நிறுவனங்களை சுதாகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோரின் குடும்பத்தினர் நிர்வகித்துவருகின்றனர்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick