தி.மு.க-வுக்குத் தாவுகிறாரா செந்தில்பாலாஜி? - பரபரக்கும் கரூர் அரசியல்!

‘அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவப் போகிறார் செந்தில்பாலாஜி’ என்பதுதான் இப்போது கரூர் பரபரப்பு. டிசம்பர் 9-ம் தேதி இரவு தன் ஆதரவாளர்களுடன் அவர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட, விவகாரம் விறுவிறுப்பாகிறது.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார் செந்தில் பாலாஜி. முன்னாள் அமைச்சரான இவர், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்நிலையில், ‘அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மறுபடியும் எம்.எல்.ஏ ஆகியே தீருவது’ என்று தொகுதியில் பம்பரமாகச் சுற்றி வருகிறார் செந்தில்பாலாஜி. அவரின் அரசியல் எதிரியான போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, ‘இந்த முறை செந்தில்பாலாஜியை ஜெயிக்க விடக் கூடாது’ என்ற முனைப்பில் இருக்கிறது. இந்நிலையில்தான், ‘செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குத் தாவப்போகிறார்’ எனத் தகவல் பரவி, கரூர் அரசியலைச் சூடாக்கியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick