மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மினி மீல்ஸ்

சீமான் VS திருமுருகன் காந்தி!

டல் நலக்குறைவால் மரணமடைந்த நெல் ஜெயராமனின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னையில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வந்து அஞ்சலி செலுத்தினர். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி அஞ்சலி செலுத்திவிட்டுக் கிளம்பத் தயாரானார். அந்த நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் சீமான் அங்கு வந்தார். இருவருமே எதிரெதிர் துருவங்களாகச் செயல்படுபவர்கள் என்பதும், இணையத்தில் இவர்கள் இருவரின் ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக்கொள்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இருக்கிறார் என்று இவரிடமும், இவர் இருக்கிறார் என அவரிடமும் இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் கிசுகிசுக்க... திருமுருகன் காந்தி கிளம்பாமல் அங்கேயே நின்றார். சீமானும் உள்ளே வராமல் நின்றார். இறுதியில் ஒருவழியாக, இருவரும் எதிரெதிரே சந்திக்க, புன்னகைத்தவாறு வணக்கம் சொன்னபடி இருவரும் ‘அக்னி நட்சத்திரம்’ பட நாயகர்கள் போலக் கடந்துசென்றனர்.

Editor’s Pick