சரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம் | Opposition Parties meeting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

சரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்

ந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான எச்சரிக்கை மணியோசை என்று எதிர்பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட அதை உறுதிப்படுத்தும் வகையில், மோடியின் சாம்ராஜ்யம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இதுநாள்வரை உரிய முக்கியத்துவம் பெறாமல் இருந்த காங்கிரசுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் அதைத் தேடிக் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய ஆட்டத்தை முன்னிலும் வேகமாக முன்னெடுக்கும் முனைப்புடன் சீக்கிரமே காங்கிரஸ் காய்களை நகர்த்தும் என்றே தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல்நாள்தான் டெல்லியில் பி.ஜே.பி-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், தெலுங்கு தேசத்தின் சந்திர பாபு நாயுடு, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, லோக் தந்திரிக் ஜனதா தளத்தின் சரத் யாதவ், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி என்று பலரும் இதில் பங்கேற்றனர். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick