ஓங்கும் கை... மூழ்கும் தாமரை! | Five States Assembly Election Status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஓங்கும் கை... மூழ்கும் தாமரை!

- சக்திவேல்
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி

த்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், டிசம்பர் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், பெரும்பாலான இடங்களில் ‘கம் பேக்’ கொடுத்திருக்கிறது காங்கிரஸ். மிசோராமில் அரியணை ‘கை’ நழுவியிருக்கிறது. தெலங்கானாவில் பலமான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

ஐந்து மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம், இந்த மாநிலங்களில் பி.ஜே.பி-யும் காங்கிரசும் நேரடியாக மோதின. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆரம்பத்தில் இழுபறியாக இருந்த நிலை பின்னர், காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக மாறியது.

நெருக்கிப் பிடித்து வெற்றியைத் தொட்டிருக்கிறது காங்கிரஸ். சென்ற முறை இமாலய வெற்றியடைந்த வசுந்தராவின் பரிவார், இம்முறை பரிதாபகரமாகத் தோற்றிருக்கிறது. அவரது அமைச்சர்கள் பலரே மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள். ராஜஸ்தான் தேர்தலில் ‘வேலைவாய்ப்பின்மை’ பெரியளவில் எதிரொலித்தது. அதை வசுந்தராவும் உணர்ந்திருந்தார். அதை சரிக்கட்ட முடியவில்லை. ‘பெண் அரசியல்வாதி நான்’ என்று பரிதாபமாக ஓட்டு கேட்டதையும் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick