ரூ.17 லட்சம்... 117 கூரை வீடுகள்... சொந்தச் செலவில் கட்டித்தரும் அரசு அதிகாரிகள்!

புயலில் பாதித்த மக்களுக்காக வீடுகளைக் கட்டித்தருவோம் என்று சொல்லியிருக்கிறது அரசு. ஆனால், புயல் மீட்புப் பணிகளுக்காக பட்டுக்கோட்டை பகுதிக்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், தங்களது சொந்த முயற்சியில் கைக்காசைச் செலவழித்து, வீடுகளை இழந்துத் தவிக்கும் மக்களுக்கு ரூ.17 லட்சம் செலவில் 117 கூரை வீடுகளை அமைத்துவருகிறார்கள்.

பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள ஒட்டங்காடு, கொண்டிக்குளம், துவரங்குறிச்சி ஆகிய ஊர்கள் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குடிசைகள், காற்றில் பறந்துவிட்டன. சாலையோரத்திலும் பேருந்து நிலையத்திலும் தங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதில் ஒட்டங்காடு கல்லணைக் கால்வாயின் கரையில் குடிசை வீடுகளில் தங்கி பூம்பூம் மாடுகள் வைத்துத் தொழில் செய்துவந்த ஆதியன் சமூகத்து மக்களின் கூரை வீடுகளும் மொத்தமாக அழிந்துவிட்டன. இந்தப் பகுதியில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட இயக்குநர் தேவநாதன், மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். அவரிடம் அந்த மக்கள் தங்களது துயரங்களைச் சொல்லிக் கண்கலங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick