ஆஹான்

Sunder rajan
சூழலியல் நீதியை உள்ளடக்கியதுதான் சமூகநீதி. காற்று மாசால் டெல்லிவாசிகளின் ஆயுள் பத்தாண்டுகள் குறைவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிற பகுதி மக்களின் ஆயுளில், நான்கரை ஆண்டுகள் குறைகின்றன. கடந்த ஆண்டு 12.4 லட்சம் இந்திய மக்கள் காற்று மாசால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. காற்று மாசைக் கவனிக்காமல் விடுவது, நீதியை மறுப்பதற்குச் சமம்; சூழலியல் நீதியை உள்ளடக்கியதுதான் சமூகநீதி என்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். வசதியுள்ளவர்கள காற்று மாசிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகளை வாங்கிக்கொள்ளலாம். ஏழைகள் என்ன செய்வார்கள்?

Aruldoss borntowin
பட்டியலின மக்கள் ரெண்டுபட்டால் பாசிச அரசுக்கும், ஆதிக்கக் கும்பலுக்கும்தான் கொண்டாட்டம். பா.இரஞ்சித் பேச்சை, அந்தக் கூட்டத்தில் இருந்த நானும் கவனித்தேன். ‘பட்டியலின மக்கள் கொலை செய்யப்படுவதையும், ஆணவக் கொலைகள் நடப்பதையும் பெரிய கட்சிகள் போராட்டமாக நடத்துவதில்லை’ என்று பேசினார். பெரிய அரசியல் கட்சிகளில் தனித் தொகுதியில் நின்று போட்டியிட்டு, 46 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் வாய் திறந்து பேச முடியவில்லை என்றால், அவர்களைத் தடுப்பது அந்தக் கட்சிகள் தானே? யோசிக்க வேண்டிய கருத்து இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick