மதுரை ‘தான்’ அறக்கட்டளைக்கு பிசினஸ் ஸ்டார் விருது! - நம்பிக்கை அளித்த நாணயம் விகடன்...

மிழகத்தின் மிகச் சிறந்த தொழிலதிபர்களைக் கெளரவிக்கும் நாணயம் விகடனின் பிசினஸ் ஸ்டார் அவார்டு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த ‘தான்’ (DHAN) அறக்கட்டளை நிறுவனத்துக்கு நாணயம் விகடனின் ‘சோஷியல் கான்சியஸ்னஸ் அவார்டு’ அளிக்கப்பட்டது. 

‘தான்’அறக்கட்டளையை 1997-ம் ஆண்டு தொடங்கினார் வாசிமலை. மதுரையின் எழுமலையில் பிறந்து, வேளாண் பட்டம் பெற்று, ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ படித்தவர். படிக்கும்போதே, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக உழைப்பதைவிட, சமூகத்தின் எளிய மனிதர்களுக்காகப் பாடுபட வேண்டும் என்று நினைத்தார். அவர் தொடங்கிய ‘தான்’ அறக்கட்டளையால் பல லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.  இந்த விருதைப் பெற்றுக்கொண்ட எம்.பி.வாசிமலை, “பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை’’ என்றார். ஈரோட்டைச் சேர்ந்த டி.எம்.டபிள்யு சி அண்டு சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் சி.இ.ஓ-வான   என்.சண்முகத்துக்கு ‘எம்.எஸ்.எம்.இ ஸ்டார் அவார்டு’ வழங்கப்பட்டது. என்ஜினீயரிங் கல்லூரி வேலையைவிட்டு விலகி, சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கிய இவர், இன்று 150 கோடி ரூபாய் அளவுக்கு டேர்ன் ஓவர் செய்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick