கோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்! - துளிர்க்கும் நம்பிக்கை...

மேற்குத் தொடர்ச்சி மலை... நதிகளின் தாய்மடி. குமரி தொடங்கி குஜராத்வரை, 1,600 கி.மீ நீளும் இந்த மலைத்தொடரின் சோலைக் காடுகளிலிருந்தும் புல்வெளிகளில் இருந்தும்தான் தென்னிந்தியாவின் மொத்த நதிகளும் உற்பத்தியாகின்றன. பல கோடி மக்களுக்கு நீராதாரமாகவும், பொருளாதாரத்தின் ஆணிவேராகவும் இருக்கிற இந்த மலைத்தொடரின் உயிர்த் தன்மையையும் தனித்துவத்தையும் பாதுகாக்க, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழு வீச்சில் இயங்கி வருகிறது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கம். அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்றாக, கடந்த டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் கோவா அருகே இருக்கும் மட்காய் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick