சுட்டுப்பிடிக்கச் சொல்லும் விவசாயிகள்... எதிர்க்கும் வன விலங்கு ஆர்வலர்கள்!

கோவையில் யானை யுத்தம்

கோவை மாவட்டப் பகுதிகளில் யானைகள் – மனிதர்கள் ‘எதிர்கொள்ளல்’ பிரச்னை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்துவருகிறது. காட்டு யானைகள் தாக்கியதில், ஆண்டு ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்டோர் மரணமடைவதால், யானை என்று சென்னாலே கதிகலங்கிப் போகிறார்கள், கோவை மக்கள்.

கோவை, தடாகம், சின்னத்தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளை ஒட்டியுள்ள வனத்தில் இருக்கும் காட்டு யானைகளான விநாயகனும், சின்னத்தம்பியும் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. விளைநிலங் களையும், வீடுகளையும் அடிக்கடி சேதப்படுத்துவ தால், அந்த இரு யானை களையும் சீக்கிரம் பிடிக்க வேண்டும் என்றும், உயிருடன் பிடிக்க முடியாவிட்டால், சுட்டாவது பிடிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், “யானைகளால் விவசாயிகளின் உயிர் போகிறது. ஊருக்குள் வரும் யானைகளை உங்களால் இடமாற்றம் செய்ய முடியவில்லையென்றால், அவற்றைச் சுட்டாவது பிடியுங்கள்” என்று ஆவேசப்பட்டனர். ஆனால், யானைகளைச் சுட்டுப்பிடிக்கவேண்டும் என்பதை எதிர்க்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்களும், சூழல்வாதிகளும். இந்த இரு யானைகளின் உயிருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick