கந்தசஷ்டி விழாவில் ஸ்டெர்லைட்! - மக்களைப் பிளவுபடுத்துகிறதா வேதாந்தா? | speech about Sterlite Copper in kanda sashti function - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கந்தசஷ்டி விழாவில் ஸ்டெர்லைட்! - மக்களைப் பிளவுபடுத்துகிறதா வேதாந்தா?

நீதிபதி தருண் அகர்வால் குழு, ஸ்டெர்லைட் ஆலைக்குச் சாதகமான அளித்த அறிக்கையால் தகிக்கிறது தூத்துக்குடி. இந்நிலையில், “ஸ்டெர்லைட் நிறுவனம், மதத்தை வைத்து மக்களைப் பிளவுப்படுத்தப் பார்க்கிறது” என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர்.

சமீபத்தில் அந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுகந்தி, கந்த சஷ்டி புத்தகம் ஒன்றை நம்மிடம் காட்டி, ‘‘திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போது, ‘இறைப் பணியில் ஸ்டெர்லைட் காப்பர்’ என்ற பெயரில் கந்தசஷ்டி புத்தகங்களை லட்சக்கணக்கில் அச்சிட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். தொடர்ந்து வழங்கியும் வருகிறார்கள். புத்தகத்தின் உள்ளே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திவருபவர்கள், இப்போது மதரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்தப்பார்க்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick