கமிஷன் அடிக்கவா கான்கிரீட் சாலை? - குமுறும் கோவை மக்கள்

கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனாரி தொடங்கி ஆச்சிப்பட்டி வரை, 27 கிலோ மீட்டருக்கு போடப்பட்டுள்ள கான்கிரிட் சாலையை, ‘காவு வாங்கும் சாலை’ என்றே அழைக்கிறார்கள் கோவை, பொள்ளாச்சி மக்கள். இதில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி அந்த விபத்துக்களின்போது தார் சாலையைவிட காயங்கள் மிக அதிகமாக ஏற்படுவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் அதிகம் இருக்கும் இந்தச் சாலையை முறைப்படி அமைக்காததால், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் 27 கி.மீ தொலைவுக்கு, ரூ.414.90 கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் போடப்பட்ட இந்தச் சாலைக்காக 2,133 மரங்கள் வெட்டப்பட்டு, சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. தமிழகத்தின் முதல் நீளமான கான்கிரீட் சாலை என்ற பெருமையையும் கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை பெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick